மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

ஜுங்கா: இறுதிகட்ட பணியைத் தொடங்கிய விஜய் சேதுபதி

ஜுங்கா: இறுதிகட்ட பணியைத் தொடங்கிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் 'ஜூங்கா' படத்தின் டப்பிங் பணிகள் இன்று காலை தொடங்கியது.

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கும் படம் ஜுங்கா. வனமகன் படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சாயிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நேஹா சர்மா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தைப் போல ஜுங்கா மனம் விட்டுச் சிரிக்கக்கூடிய படமாக இருக்கும்” என விகடன் விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். இதன் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்றது. டப்பிங் பணிகள் இன்று (மார்ச் 6) காலை பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதில், விஜய் சேதுபதி பங்கேற்று தான் நடித்துள்ள காட்சிகளுக்கு குரல் கொடுத்தார்.

சித்தார்த் விபின் இசையமைத்துவரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்ய, வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். ‘ஏ&பி குரூப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தனது ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் இசை, ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon