மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

அமெரிக்காவிடம் இயற்கை எரிவாயு இறக்குமதி!

அமெரிக்காவிடம் இயற்கை எரிவாயு இறக்குமதி!

கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து இயற்கை எரிவாயுவையும் இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவிடமிருந்து 20 வருடங்களுக்கு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பேரில் லூசியானாவிலுள்ள செனியர் எனர்ஜி சபைன் பாஸ் நிறுவனத்திடமிருந்து இந்தியாவின் கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வருடத்திற்கு 3.5 மில்லியன் டன் அளவிலான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யவுள்ளது. இதுகுறித்து கெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவானது மெரிடியன் ஸ்பிரிட் எனும் கப்பலில் செனியர் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 28ஆம் தேதியில் தாபூல் முனையத்தை இந்தக் கப்பல் வந்தடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் செனியருக்குமான வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. 1975ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியிருந்தது. 2015ஆம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவினால் இத்தடை நீக்கப்பட்டது. செனியர் மற்றும் கெயில் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் நீண்ட நாட்கள் தொடரும் என செனியர் தலைமைச் செயலதிகாரியான ஃபஸ்கோ தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon