மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 18 செப் 2019

ராஜீவ் கொலை: 2 பேர் விடுதலை வழக்கு ஒத்திவைப்பு!

ராஜீவ் கொலை: 2 பேர் விடுதலை வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரிய வழக்கின் இறுதி விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயகுமார், தங்களைத் தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று(மார்ச் 6) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் சதிஸ்குமார் அமர்வு, இறுதி விசாரணைக்காக வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon