மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

நெய்மர் இன்றி சமாளிக்குமா பாரிஸ்?

நெய்மர் இன்றி சமாளிக்குமா பாரிஸ்?

சாம்பியன்ஸ் லீக் தொடரில் நாளை (மார்ச் 7) நடைபெறவிருக்கும் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, பாரிஸ் அணியுடன் மோத உள்ளது. இதில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் ஆட இயலாததால் பாரிஸ் அணி சிக்கலில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. மொத்தமுள்ள 32 அணிகள் குழுவுக்கு 8 அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடத்தப்படும். லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு முறை மோத வேண்டும். இந்தப் போட்டிகளின் முடிவில் அதிக கோல்கள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதன்படி கடந்த 15ஆம் தேதி பாரிஸ் அணியுடன் முதல் கட்டப் போட்டியில் விளையாடி 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக பாரிஸ் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் நாளை இரண்டாவது முறையாக மோத உள்ளன. இப்போட்டியில் ரியல் மாட்ரிட் அணி கோல் அடிக்காமல் பாரிஸ் அணி இரண்டு கோல்களை அடித்தால் போட்டி சமனில் முடிவடையும். பாரிஸ் அணி 3 கோல்களை அடித்து ரியல் மாட்ரிட் அணி கோல் அடிக்கத் தவறினால் பாரிஸ் அணி வெற்றி பெறும்.

இந்தப் போட்டியில் காயம் காரணமாக பாரிஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் பங்கேற்க மாட்டார் என பாரிஸ் அணி நிர்வாகம் முன்னரே தெரிவித்தது. நெய்மர் இல்லாத நிலையில் ரியல் மாட்ரிட் அணியை பாரிஸ் அணி சமாளிக்குமா என்பது சந்தேகம்தான்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon