மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

தெருநாய் கடித்ததில் 5 சிறுமிகள் காயம்!

தெருநாய் கடித்ததில் 5 சிறுமிகள் காயம்!

கும்பகோணம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தெருநாய் கடித்ததில் 5 சிறுமிகள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் உள்ள எல்லா மக்களும் செல்லமாக வளர்க்கும் ஒரு பிராணி என்றால் அது நாய்தான். இந்த நாய்களில் வீட்டு நாய், தெரு நாய் என்று பிரிவுகள் உள்ளன. வீட்டு நாய்களைவிடத் தெரு நாய்கள் மனிதர்களை அதிகமாகக் கடிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் தெரு நாய்க் கடியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் தெரு நாய் கடித்து இறந்தும் உள்ளனர்.

மணப்படையூர், புதுப்படையூர் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய் ஒன்று, அப்பகுதியைச் சேர்ந்த 5 சிறுமிகளைக் கடித்துள்ளது. இதில் காயமடைந்த சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியில், இரு தினங்களில் 25 பேரைத் தெருநாய்கள் கடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்கள். மேலும் ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 9 வயது சிறுவன் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்தத் தெரு நாய்கள் சாலையில் செல்வோரைக் கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்துவருகின்றன.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon