மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பனிப்பொழிவால் பயிர்கள் சேதம்!

பனிப்பொழிவால் பயிர்கள் சேதம்!

கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் ராபி பயிர்களுக்கான அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் எதிர்பாராத மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாகப் பெரும்பாலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.

மார்ச் 4ஆம் தேதி பெய்த ஆலங்கட்டி மழையினால் கோதுமை, பார்லி, கடுகு போன்ற பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, சேதமடைந்த பயிர்களுக்கான மதிப்பீடு குறித்த கணக்கெடுப்பில் ஈடுபடும்படி நிவாரணப் பணியில் இருக்கும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதோடு, இக்கணக்கெடுப்பை வெகு விரைவில் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். ஜெய்ப்பூர், அல்வார், மோத்பூர், ஜுன் ஜுனு, சவாய் மதோப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் திராட்சை அளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

மேலும் ஆல்நார் மாவட்டத்தில் உள்ள நீம்ரான் பகுதிகளில் ஏற்கனவே அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த ஆலங்கட்டி மழையினால் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. தோத், டடராமர்க், ஸ்ரீமதோபூர், அஜிட்கர், ஜோராவர்னாகர், ரனோலி, பல்சானா போன்ற கிராமங்களிலும் பனிப்பொழிவால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல 2017ஆம் ஆண்டில் பெய்த எதிர்பாராத மழையினால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon