மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி!

ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி!

சென்னையில் உள்ள 70 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதற்காக மார்ச் 3ஆவது வாரத்தில், ரூ.3.80 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட உள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு மோட்டார் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. தாம்பரம் ரயில் நிலையத்திலும் அதுபோன்ற வசதிகளை ஏற்படுத்தப் பரீசிலிக்கப்பட்டுவருகிறது.

ஜனவரி 2018 வரை 12,735 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை ரயில் நிலையங்களிலுள்ள இந்த வசதிகளைப் பெற உதவியாக இருக்கும்.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 20 ரயில் நிலையங்களில் 39 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, இரண்டு ரயில் நிலையங்களில் மூன்று மின்தூக்கிகள் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon