மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 மா 2018

ரஜினி பேச்சு: அதிமுக ரியாக்‌ஷன்!

ரஜினி பேச்சு: அதிமுக ரியாக்‌ஷன்!

எம்.ஜி.ஆர் ஆட்சியமைப்போம் என்று ரஜினி கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக என்பது பருந்து, ஊர்க்குருவிகளுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

சென்னை வேலப்பன்சாவடியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை நேற்று திறந்து வைத்த நடிகர் ரஜினிகாந்த், "எம்.ஜி.ஆரின் ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியர்களுக்கான ஆட்சியை, எம்.ஜி.ஆரின் மத்திய தர வர்க்கத்தினருக்கான ஆட்சியைக் கொடுப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார். "தமிழ் பேசுவதால் மட்டும் தமிழ் வளராது. தமிழனும் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் சுந்தர்பிச்சையால் யாருக்கும் பெயர்? அப்துல்கலாமால் யாருக்குப் பெயர்? தமிழுக்குத் தானே?" என்ற ரஜினிகாந்த், மாணவர்கள் படிக்கும் காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டாம். வாக்களிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்" என்றும் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா தற்போது இல்லை, கலைஞரும் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார் நல்ல தலைவர்கள் இல்லை, அதனால் அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்"என்றும் பேசினார்.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மார்ச் 6) செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 1967ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு இந்தியைத் திணித்தபோது, இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்கள் மூலம்தான் மிகப்பெரிய புரட்சியாக உருவானது. அத்தோடு காங்கிரஸுக்கு முடிவு கட்டியாகிவிட்டது. ஆனால் மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகர் ரஜினி மாணவர்கள் மத்தியில் கூறி இருப்பது முரண்பாடாக உள்ளது என்று கூறிய அவர், தமிழ்தான் நம்முடைய உயிர் மூச்சு, நாம் அனைவரும் வீட்டில் அம்மா, அப்பா என்று தமிழில் பேசச் சொல்கிறோம். ஆனால் ரஜினிகாந்த் மம்மி, டேடி என்று பேசச் சொல்கிறார். எனவே தமிழில் பேசக் கூடாது என்னும் அவருடைய உரையைத் தமிழறிஞர்களும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள காரணத்தால் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதனைப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் தமிழ் பேசினால் தமிழ் வளராது என்ற ஒரு கண்டுபிடிப்பை ரஜினிகாந்த் கண்டுபிடித்துள்ளார்" என்றும் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 6 மா 2018