மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

நயன் வந்தார் பின்னே, போஸ்டர் வந்தது முன்னே!

நயன் வந்தார் பின்னே, போஸ்டர் வந்தது முன்னே!

நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் போஸ்டர் நேற்று (மார்ச் 5) வெளியாகிய நிலையில் இன்று விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகின்றனர்.

அறம், வேலைக்காரன் என நயன்தாரா கடந்த ஆண்டு முடிவில் வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தார். தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியான பின் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் சுற்றுலா சென்றிருந்தனர். பல நாள்களுக்குப் பின் இன்று அமெரிக்காவிலிருந்து கிளம்புவதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஓய்வை முடித்துக்கொண்டு திரும்பும் நயன்தாரா இந்த ஆண்டு இடைவெளி இல்லாமல் அஜித்தின் ‘விசுவாசம்’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டொலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோலமாவு கோகிலா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, அறிவழகன் படம், சர்ஜுன் படம் என அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். பரபரப்பாக அவர் இயங்க உள்ள நிலையில் நேற்று கோலமாவு கோகிலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

காயம் வருதே.. காயம் வருதே

சோகக் குழியில் வாழவிடுதே..

என்ற பாடல் அனிருத் இசையில் பின்னால் ஒலிக்க நயன்தாராவின் புகைப்படம் மட்டும் மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துவருகிறார், நிர்மல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற மார்ச் 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon