மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

ஓடும் ரயிலிலிருந்து குதித்துப் பெண் தற்கொலை!

ஓடும் ரயிலிலிருந்து குதித்துப் பெண் தற்கொலை!

சென்னையில் ஓடும் ரெயிலில் இருந்து பெண் ஒருவர் கூவத்திற்குள் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ரோஸ். சிறுசேரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி மனித வள அதிகாரியாகப் பணியாற்றிவந்தார். இவருக்கும் சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த அப்பல்லோ மருத்துவமனை ஊழியரான ஜீவிதா என்பவருக்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது 20 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவன் வீட்டார் ஜீவிதாவைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஜீவிதாவைக் கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும், ரோஸ் இதனைக் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஓடும் மின்சார ரெயிலிலிருந்து கூவம் ஆற்றில் குதித்து ஜீவிதா தற்கொலை செய்துகொண்டார். ரெயில்வே போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வரதட்சணைக் கொடுமையால் ஜீவிதா கூவத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீவிதாவின் கணவர் ரோஸுக்கும் அவருடன் வேலை பார்த்துவரும் பெண் மென்பொறியாளர் ஒருவருக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. கணவரின் இந்தச் செயலே, ஜீவிதா இந்தச் சோக முடிவைத் தேடிக்கொள்ளக் காரணம் என்று அவரது தாய் கீதா குற்றம்சாட்டியுள்ளார். ஜீவிதா இறக்கும் முன், அந்த பெண் மென்பொறியாளரிடம் செல்போனில் பேசி நியாயம் கேட்ட ஆடியோ தற்போது போலீசாரிடம் கிடைத்துள்ளது.

விரைவில் இந்த வழக்கு மாம்பலம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon