மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 மா 2018

சுஞ்சுவான் தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக் கொலை!

சுஞ்சுவான் தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் சுஞ்சுவான் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய முக்கியத் தீவிரவாதியைப் பாதுகாப்புப் படையினர் நேற்று (மார்ச் 5) சுட்டுக் கொன்றனர்.

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுஞ்சுவான் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பேர் காயமடைந்திருந்தனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான 4 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎஃப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீதும், எல்லைப் பகுதியில் இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக இருந்தது, பாகிஸ்தானைச் சேர்ந்த முப்தி வகாஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், ஹத்வார் பகுதியில் தீவிரவாதி முப்தி வகாஸ் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற ராணுவத்தினர், தீவிரவாதி பதுங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட கட்டிடத்தைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் முப்தி வகாஸ் கொல்லப்பட்டார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

செவ்வாய் 6 மா 2018