மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

திண்டுக்கல்லில் புளி விலை சரிவு!

திண்டுக்கல்லில் புளி விலை சரிவு!

திண்டுக்கல் மாவட்டத்தில் புளி வரத்து அதிகமானதால் புளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணர்பட்டி, தவசிமடை, அஞ்சுகுழிப்பட்டி போன்ற பகுதிகளில் புளி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இப்பகுதிகளில் விளையும் புளியோடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வரும் புளியும் திண்டுக்கல்லில் உள்ள நாகல்நகரின் சந்தையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகக் கொட்டை எடுத்த புளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.200 ஆகவும், கொட்டை எடுக்காத புளியின் விலை கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரையிலும் விற்பனையானது. சென்ற திங்கட்கிழமை (மார்ச் 5) திண்டுக்கல்லில் நடந்த சந்தையில் உள்ளூர் புளி வரத்து அதிகரித்துள்ளது. அதோடு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து தினமும் 10 டன் அளவிலான புளி வருவதால் முந்தைய விலை நிலவரத்திலிருந்து குறைந்து கொட்டை எடுத்த புளி ரூ.120 ஆகவும், கொட்டையுள்ள புளி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon