மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

சவுதியில் முதன்முறையாகப் பெண்கள் மாரத்தான்!

சவுதியில் முதன்முறையாகப் பெண்கள் மாரத்தான்!

சவுதி அரேபியாவில் முதன்முறையாகப் பெண்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நேற்று முன்தினம் (மார்ச் 4) நடத்தப்பட்டது.

சவுதி அரேபியாவின் கிழக்கு அல் ஆஹ்சா பகுதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 3.5 கிமீ நடைபெற்ற மாரத்தானில் அமெரிக்கா, நியூசிலாந்து உட்பட சவுதி பெண்கள் 1,500 பேர் கலந்துகொண்டனர். மாரத்தான் போட்டியில் சவுதி அரேபிய பெண்கள் பெரும்பாலானோர் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றனர். போட்டியில் மிஸ்னா அல் நாசர் என்ற சவுதிப் பெண், முதல் பரிசை வென்றார். அவருக்குச் சான்றிதழும் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

மிஸ்னா அல் நாசர், “இந்தப் போட்டியில் வென்றதற்கு என் குடும்பத்தினர் எனக்களித்த சுதந்திரமும் உத்வேகமுமே காரணம்” எனத் தெரிவித்துள்ளார். 2,000 பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் குடும்பத்தில் அனுமதி கிடைக்காமல் 500 பெண்கள் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதியில் பெண்களுக்கு எதிராகப் பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், சமீப காலமாக சவுதி அரசர் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் போன்றோர் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு சவுதி பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவிகள் விளையாட அமலில் இருந்த நீண்டகால தடை நீக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதி கிடைத்தது. அதேபோல், 2017 அக்டோபர் மாதம் பெண்கள் ரியாத், ஜெட்டா, டம்மான் ஆகியவற்றில் அமைந்துள்ள மூன்று விளையாட்டு மைதானங்களுக்குள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon