மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

துணைவேந்தர் பதவி: வேளாண் துறைச் செயலாளருக்கு உத்தரவு!

துணைவேந்தர் பதவி: வேளாண் துறைச் செயலாளருக்கு உத்தரவு!

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.ராமசாமி பதவியில் நீடிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக 65 வயது வரை இருக்கலாம் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. கல்வியாளர்களின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஓய்வுபெறும் வயதை 65லிருந்து 70ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, தற்போதைய துணைவேந்தர் ராமசாமி 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மூன்றாண்டு பணிமுடித்த அவர், பல்கலைக்கழக மானியக் குழு, மத்தியப் பல்கலைக்கழகச் சட்டம், தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டம் ஆகியவற்றை மீறி 70 வயதைக் கடந்தும் 6 மாதங்களாகத் துணைவேந்தராக நீடிப்பதால், அவர் பதவியில் நீடிக்கத் தடை விதிக்க வேண்டுமெனச் சுயநிதி வேளாண் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று (மார்ச் 5) விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, தமிழக அரசு வேளாண் துறை செயலாளர், வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்டோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon