மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

என்ன கூத்து காத்திருக்கிறதோ?

என்ன கூத்து காத்திருக்கிறதோ?

தமிழ் திரைத் துறை முழுவதுமாக முடங்கிக் கிடக்கும் சமயத்திலும், மகளிர் தினத்தைக் கொண்டாட மறக்க மாட்டோம் எனக் களமிறங்கியிருக்கின்றனர் தமிழ் படம் 2.0 குழுவினர்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் திரைப்படம் தமிழ் படம் 2.0. தமிழ் சினிமா எக்காலத்திலும் மறக்க முடியாத வகையில் வெற்றிபெற்ற தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இதற்கெனத் தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக்குத் தீனியிடும் விதமாக மகளிர் தினத்தன்று ஒரு பாடலை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா கட்டமைத்துவைத்திருந்த அடிப்படைகளை அடித்து நொறுக்கிய திரைப்படம் தமிழ் படம். அந்த வெற்றி ஃபார்முலாவை வைத்து, தற்போதைய மாடர்ன் சினிமா என்ன அராஜகங்களைச் செய்கிறது என்பதை யதார்த்தம் மாறாமல் அமுதன் படத்தில் காட்டுவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தன்று வெளியாகும் பாடலில் என்னென்ன கூத்துகள் இருக்குமோ என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

‘கரையாத கல்லும் கரையும்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்குக் கண்ணன் இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் ‘பச்சை மஞ்சள் சிகப்புத் தமிழன்டா’, ‘ஓமகசீயா ரெண்டக ரெண்டக’ ஆகிய பாடல்கள்போல் இல்லாமல் உண்மையாகவே மகளிருக்கான பாடலாக இருந்தால் நல்லது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon