மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

முத்தரப்புத் தொடர் இன்று தொடக்கம்!

முத்தரப்புத் தொடர் இன்று தொடக்கம்!

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 தொடர் இன்று (மார்ச் 6) தொடங்குகிறது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய, வங்கதேச அணிகள் நிதாஹாஸ் டிராபி என்ற முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கவிருக்கும் முதல் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் பலபரிட்சை நடத்த உள்ளன. இந்தத் தொடர் வரும் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணியில் விராட் கோலி உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில் இலங்கை அணியைச் சமாளித்து வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சன்டிமால் தலைமையிலான இலங்கை அணியில் உபுல் தரங்கா, குஷால் மெண்டீஸ், திசாரா பெரைரா போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானத்தில் விளையாட உள்ளதால் இலங்கை அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது என்றும் சொல்லலாம்.

வங்கதேச அணியைப் பொறுத்தவரை அனுபவ வீரரான ஷஹிப் ஹல் ஹசன் காயம் காரணமாக விலகி இருப்பது அணிக்குச் சற்றே பின்னடைவாக உள்ளது. இருப்பினும் ரஹீம், தமிம் இக்பால், ரகுமான் போன்ற வீரர்கள் வங்க தேச அணியின் வெற்றிக்காகப் போராடுவர். இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon