மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி குறித்து பின்னர் பார்க்கலாம். எங்கள் அணியில் உள்ள 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சடுகுடு ஆட்டம் ஆடுகிறனர். வெற்றிடம் இருப்பதாகக் கருதி அரசியலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள். யாருடைய வருகையும் எங்கள் வெற்றியைப் பாதிக்காது. ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்கு நேரடியாகப் பதில் கூறாமல், அவன், இவன் என்று ஒருமையில் முதல்வர் பேசியது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல” என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெறலாம். தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்ட அவர், “எடப்பாடியையும், பன்னீர்செல்வத்தையும் பாஜகதான் இயக்குகிறது என்பதனை பன்னீர்செல்வமே ஒத்துக் கொண்டுள்ளாரே. பிரதமர் சொல்லித்தான் துணை முதல்வர் ஆனேன் என்று பன்னீர்செல்வமே தேனியில் சொல்லி இருக்கிறார். அவரது அறிக்கையிலிருந்து உண்மை தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon