மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 6 மா 2018

சமன் செய்து பட்டம் வென்ற ஆனந்த்

சமன் செய்து பட்டம் வென்ற ஆனந்த்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற டால் நினைவு ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

டால் நினைவு ரேபிட் செஸ் போட்டி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 தலைசிறந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தத் தொடரின் இறுதிச் சுற்று நேற்று முன்தினம் (மார்ச் 4) நடைபெற்றது. அதில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃப்ண்டைவை எதிர்த்து விளையாடிய ஆனந்த் போட்டியைச் சமனில் முடித்தார். இதனால் நான்கு வெற்றிகள், நான்கு டிரா, ஒரு தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்ற ஆனந்த் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

மூன்றாவது சுற்றில் ஷகிரியார் மமேயாரோவுடன் தோல்வியைத் தழுவிய ஆனந்த் அதன் பின்னர் விளையாடிய சுற்றுக்களில் சிறப்பாக விளையாடித் தோல்வியைத் தவிர்த்தார். இயன் நேபோனியாட்ச்சி, அலெக்ஸாண்டர் க்ரிச்சுக், டானில் துபவ், ஹிக்கரு நாக்முரா ஆகியோரை ஆனந்த் வீழ்த்தினார்.

இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற வேர்ல்ட் ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் அதன் தொடர்ச்சியாக இந்த பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon