மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

ஐபிஎல்: கேப்டனாக மற்றொரு தமிழக வீரர்!

ஐபிஎல்: கேப்டனாக மற்றொரு தமிழக வீரர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 11ஆவது சீசன் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. கடந்த 10 சீசன்களாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வந்த ஐபிஎல் தொடர், தற்போது கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவரை பெரும்பாலான அணிகள் அதன் வீரர்களை மாற்றம் செய்தது கிடையாது. ஆனால், இந்த முறை பெரும்பாலான வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட புதிய அணியைப் போல் களமிறங்குகின்றன. எனவே, எந்த அணி சிறந்தது, எந்த அணியில் யார் சிறப்பாக விளையாடப் போகிறார்கள், எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் என்பது போன்ற பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகள் ரசிகர்களை இதன் பக்கம் ஈர்த்துள்ளது.

புதிதாக அணி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பிளேயிங் லெவனில் யார் இடம்பெற போகிறார்கள், அணியை யார் வழி நடத்துவார்கள் என்ற கேள்வியும் எழத் தொடங்கியது. அதன்படி சமீபத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கொல்கத்தா அணியின் கேப்டனாக மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொல்கத்தா அணியின் கேப்டனாக கவுதம் காம்பீர் செயல்பட்டு வந்தார். இந்த வருடம் அவர் டெல்லி அணியால் ஏலம் பெறப்பட்டார். தற்போது கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ரஞ்சி டிராபி போட்டிகளில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டுள்ளார். இந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் தினேஷ் கார்த்திக் ரூ.7.4 கோடிக்கு கொல்கத்தா அணியால் பெறப்பட்டார். அவரை கேப்டனாகத் தேர்வு செய்தது குறித்து பேசும்போது ”விராட் கோலி அவரது அதிரடியான ஆட்டத்தினால் கேப்டனாக மற்ற வீரர்களை வழி நடத்துகிறார். வார்த்தைகளில் கூறுவதை விட பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அணியை அவர் வழி நடத்தி வந்துள்ளார். அவரைப் போல் நானும் செயல்பட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon