மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

விஜய்க்கு வில்லி வரலட்சுமியா?

விஜய்க்கு வில்லி வரலட்சுமியா?

விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிகை வரலட்சுமி தற்போது இணைந்துள்ளார்.

வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கும்போது வருடத்துக்கு ஒரு படம் என்பதே அதிகபட்சமாக இருந்த நிலையில் குணசித்திர வேடங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கிய பின் கடந்த ஆண்டு மட்டும் ஆறு படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்தப் படமும் இன்னும் வெளியாகாதபோதும் கைவசம் சண்டகோழி 2, நீயா 2, மாரி 2, சக்தி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர். சந்திரமௌலி, கன்னிராசி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

வரலட்சுமி முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளதாகப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (மார்ச் 5) தெரிவித்துள்ளது.

விஜய் மல்ட்டி மில்லியனராக நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன் கதாபாத்திரங்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகியது. ராதாரவியும், பழ.கருப்பையாவும் உறுதியான பின் மூன்றாவது வில்லன் யார் என்ற கேள்வி எழுந்தது. வரலட்சுமி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானதும் வரலட்சுமி வில்லி வேடத்தில் நடிப்பதாகத் தகவல் பரவிவருகிறது. ஆனால், படக்குழு வரலட்சுமி கதாபாத்திரம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon