மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சரிவை நோக்கி கடுகு உற்பத்தி!

சரிவை நோக்கி கடுகு உற்பத்தி!

நடப்பு பருவத்தில் இந்தியாவின் கடுகு உற்பத்தி 4 சதவிகிதம் சரிவைச் சந்திக்கும் என்று சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இந்திய சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்புப் பருவத்தில் மொத்தம் 63.3 லட்சம் டன் அளவிலான கடுகை மட்டுமே இந்தியா உற்பத்தி செய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில் கடுகு உற்பத்தி 65.75 லட்சம் டன்னாக இருந்தது. கடுகு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டில் விதைப்புப் பரப்பு குறைந்துள்ளதின் விளைவாக இந்த ஆண்டின் ஒட்டுமொத்த கடுகு உற்பத்தியில் சரிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், சமீபத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருந்த மதிப்பீட்டறிக்கையில், கடுகு உற்பத்தி 75.40 லட்சம் டன்னாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டில் கடுகு உற்பத்தி 24.50 லட்சம் டன்னாக இருக்கும் என்று கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டில் ராஜஸ்தானில் 29.50 லட்சம் டன் அளவிலான கடுகு உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. கடுகு விதைப்புப் பரப்பு கடந்த ஆண்டில் 25.62 லட்சம் ஹெக்டேரிலிருந்து இந்த ஆண்டில் 17 சதவிகிதச் சரிவுடன் 21.26 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலத்திலும் கடுகு உற்பத்தி இந்த ஆண்டில் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி அதிகமாகவே இருக்கும் என்று சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon