மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 24 நவ 2020

அனிருத் வாய்ப்பைக் கைப்பற்றிய தமண்

அனிருத் வாய்ப்பைக் கைப்பற்றிய தமண்

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.தமண் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

தமிழில் அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துவரும் அனிருத், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்த் திரையுலகில் மட்டும் தீவிரமாக இயங்கிவந்த அனிருத்துக்கு தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான நானும் ரவுடிதான், தங்கமகன், ரெமோ, விவேகம் ஆகிய படங்கள் அங்கும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. இதன் காரணமாக த்ரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ‘அக்னியாதவாசி’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் த்ரி விக்ரம், ஜூனியர் என்.டி.ஆரைக் கதாநாயகனாக வைத்து அடுத்ததாக இயக்கும் படத்திலும் அனிருத் இசையமைப்பாளராகப் பணியாற்றுவார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அந்தப் படத்துக்கு எஸ்.எஸ்.தமண் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். தமண் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் பணியாற்றிவந்தாலும் தமிழைவிட தெலுங்கில் அவருக்கு அதிகளவிலான படங்கள் ஒப்பந்தமாகின்றன. இவர் இசையமைப்பில் பாகமதி திரைப்படம் வெளியாகி வரவேற்புப் பெற்றுவரும் நிலையில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். அக்னியாதவாசி படத்தைத் தயாரித்த ஹாரிகா, ஹாசின் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தையும் தயாரிக்கின்றனர். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon