மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

நாடு முழுவதும் அதிவேக ரயில்கள்!

நாடு முழுவதும் அதிவேக ரயில்கள்!

10,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் “நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில்கள் புதிதாக இயக்கப்படவுள்ளன. சுமார் 10,000 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை ஏப்ரல் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். மணிக்கு 200 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்துக்கான பணிகள் பெரும்பாலும் டெண்டர் முறையில்தான் மேற்கொள்ளப்படவுள்ளன. உலக அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் இணைய அழைப்பு விடுக்கப்படவுள்ளது. கட்டுமானச் செலவுகளைக் குறைக்கும்விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கிறது. மின்வழித் தடங்கள் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களின் பெட்டிகள் அலுமினியம் கொண்டு குறைந்த எடையில் தயாரிக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்கான நிதியானது பெரும்பாலும் நிதி நிறுவனங்கள், பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது” என்றார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon