மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சூரிய உதயத்துக்கு முன்பே டிக்கெட் வழங்கப்படும்!

சூரிய உதயத்துக்கு முன்பே டிக்கெட் வழங்கப்படும்!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைச் சுற்றிப் பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் வழங்கும் பணி சூரிய உதயத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்னரே தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க முடியும்.

தாஜ்மகாலை மூன்று மணி நேரம் சுற்றிப் பார்க்க ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கென வெவ்வேறு நிறங்களில் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. தற்போது வரை உள்பகுதியில் உள்ள மும்தாஜ் கல்லறையைப் பார்வையிட கட்டணம் இல்லை.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வெளியே சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரத்துக்கு ரூ.50 எனவும், உள்பகுதிக்குச் சென்று பார்க்கக் கூடுதலாக 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவையில் நேற்று (மார்ச் 5) கலாசாரத் துறை இணை மந்திரி மகேஷ் சர்மா, தாஜ்மகாலின் திறப்பு மற்றும் நிறைவு நேரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அதில், “டிக்கெட் கவுன்ட்டர் சூரிய உதயத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகத் திறக்கப்படும், சூரிய மறைவுக்கு 30 நிமிடத்துக்கு முன்பாக மூடப்படும். 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் முகலாய கால நினைவுச் சின்னம் மூடப்பட்டிருக்கும்” எனக் கூறியுள்ளார்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon