மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 24 நவ 2020

கிச்சன் கீர்த்தனா: வேப்பம்பூ வடகம்!

கிச்சன் கீர்த்தனா: வேப்பம்பூ வடகம்!

என்ன கீர்த்தனா, அதுக்குள்ள வடகமா என யோசிக்க வேண்டாம் தோழிகளே. உங்கள் சந்தேகம் சரிதான். வடகம் போட ஆரம்பிப்பது ஏப்ரல், மே மாதங்களில்தான். ஆனால், வேப்பம்பூ வேண்டும் அல்லவா? இப்போதே யோசித்து, சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். என்ன சரிதானே... ஆரம்பிப்போமா?

தேவையான பொருள்கள்

காயவைத்த வேப்பம்பூ – 3 கப்

உளுந்து – 1 கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய் பிளேக்ஸ் – 2 மேசைக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

பெரிய சீரகம் – 1 மேசைக்கரண்டி

சிறிய சீரகம் – 1 மேசைக்கரண்டி

வெட்டிய வெங்காயம் – அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

மிளகு, பெரிய, சிறிய சீரகங்களைப் பொடித்து கொள்ளவும். உளுந்தை 5 - 6 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், அரைத்த உளுந்தினுள் காய்ந்த வேப்பம்பூ மற்றும் ஏனைய பொருள்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாது இறுக்கமாகக் குழைக்கவும்.

அதை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.

வேப்பம்பூ வடகம் தயார்.

குறிப்பு:

இதற்கு வெங்காயத்தை நல்ல குறுகலாக வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து பாவிக்கலாம். பழுதாகாது. சுவையானது. வேப்பம்பூ ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதே முறையில் பாகற்காய், முருங்கைக்காய், வாழைப்பூ கொண்டும் வடகம் செய்யலாம்.

கீர்த்தனா சிந்தனைகள்:

விட்டுக்கொடுத்துப் போகிறவர்களை தைரியம் இல்லாதவர்கள் என்றும், வைராக்கியமாக இருப்பவர்களை ஈகோ பிடித்தவர் என்றும் சித்திரிக்கும் விந்தை உலகம்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon