மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

மெஸ்சி சுழலில் வீழ்ந்த அத்லெட்டிகோ!

மெஸ்சி சுழலில் வீழ்ந்த அத்லெட்டிகோ!வெற்றிநடை போடும் தமிழகம்

லா லீகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ அணியை வீழ்த்தியது.

லா லீகா கால்பந்து தொடரின் 2017-18ஆம் ஆண்டிற்கான சீசன் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா மற்றும் அத்லெட்டிகோ அணிகள் பலபரிட்சை நடத்தினர். போட்டியின் 26ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்சி ப்ரீ கிக் முறையில் ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார். இடையே மூன்று எதிரணி வீரர்கள் இருக்க அவர்பந்தினை சுழன்று கொண்டே செல்வது போல் சரியே அடித்து, அந்த பந்து கோல் கீப்பர் விரல்களை உரசிக்கொண்டு கோல் போஸ்டினுள் நுழைந்தது. இந்த கோல் மூலம் இதுவரை கால்பந்து விளையாட்டில் ஒட்டு மொத்தமாக 600 கோல்களை அடித்து புதிய சாதனையை மெஸ்சி நிகழ்த்தி உள்ளார். அவர் இதுவரை பார்சிலோனா அணிக்காக 539 கோல்களும், அர்ஜென்டினாவிற்காக 61 கோல்களும் அடித்துள்ளார்.

முதல் கோல் மெஸ்சி அடித்த சிறிது நேரத்திற்குள் அணியின் கேப்டன் இனிஸ்டா காயம் காரணத்தால் போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஆண்ட்ரே கோம்ஸ்அணியில் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னர் பார்சிலோனா அணி வீரர்கள் இருமுறையும், அத்லெட்டிகோ அணி வீரர்கள் ஒருமுறையும் கோல் அடிக்க முயற்சி செய்து கோல் அடிக்க முடியாமல் போனது. இடையே அத்லெட்டிகோ அணி வீரர் டீகோ கோஸ்டா அடித்த பந்து ஆஃப் சைட் ஆகி கோலுக்குள் சென்றது எனவே சமன் செய்யும் வாய்ப்பினை அத்லெட்டிகோ அணி இழந்தது. இதனால் பார்சிலோனா அணி இந்த லா லீகா தொடரில் தோல்விகளே சந்திக்காமல் 69 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon