மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

இரட்டை விரல் காட்டாத ரஜினியின் எம்.ஜி.ஆர்.!

இரட்டை விரல் காட்டாத ரஜினியின் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர். என்ற அஸ்திரத்தை இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் பலர் கையிலெடுத்திருக்கிறார்கள். கடைசியாக கருப்பு எம்.ஜி.ஆர். என்ற பட்டத்துடன் கையிலெடுத்தவர் விஜயகாந்த். இப்போது ரஜினியும் எம்.ஜி.ஆர். அஸ்திரத்தைக் கையிலெடுத்துவிட்டாரோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சென்னையை அடுத்துள்ள வேலப்பன் சாவடியில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (மார்ச் 5) எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்டிருக்கிறார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவதாக அறிவித்து மாவட்டம்தோறும் ஆலோசனைகளை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், இன்று எம்.ஜி.ஆர். சிலைத் திறப்பு விழாவில் ரஜினி கலந்துகொண்டபோது ஏராளமான ரஜினி மக்கள் மன்றத்தினர் திரண்டுவிட்டனர்.

இன்று மாலை கோயம்பேடு வழியாக ரஜினி மதுரவாயல் சாலையில் செல்லும்போது அந்தப் பகுதியில் போக்குரவத்து முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டது. கொஞ்ச நேரம் காருக்குள் இருந்த ரஜினி தன்னைச் சுற்றி மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டதை உணர்ந்து காரின் மேல் பகுதியைத் திறந்து எழுந்து அனைவரையும் பார்த்துக் கையசைத்தார். இதனால் கோயம்பேடு முதல் மதுரவாயல் பகுதி வரை அறிவிக்கப்படாத ரஜினியின் பேரணி போல ஆகிவிட்டது.

கூட்டத்தில் நீந்தி மாலை 5.20 மணிக்கு வேலப்பன் சாவடியில் இருக்கும் கல்வி நிலையத்துக்குள் வந்தார் ரஜினி. இந்த கல்வி நிலையத்தின் உரிமையாளரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் ரஜினியை வரவேற்றார். புதிய நீதிக் கட்சி சமீப காலம் வரை பாஜகவின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத் தக்கது.

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆரின் வெண்கலச் சிலையை ரஜினி திறந்து வைத்தார்.

இதில் குறிப்பிடத் தக்க அம்சமாக, “தமிழகத்தில் 99 சதவிகித எம்.ஜி.ஆர். சிலைகள் அதிமுகவால் நிறுவப்பட்டவையே. அவை எம்.ஜி.ஆர். ஆர் இரட்டை விரலைக் காட்டிக் கொண்டு நிற்பது போலவே இருக்கும். ஆனால் ரஜினி இன்று திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலை வழக்கமான எம்.ஜி.ஆர். சிலையாக இல்லாமல் இரு கைகளியும் வயிற்றுப் பகுதியருகே வைத்து கைக்குட்டை பிடித்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவை நினைவுபடுத்தாத எம்.ஜி.ஆரை

ரஜினி விரும்புகிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திங்கள், 5 மா 2018

அடுத்ததுchevronRight icon