மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

80 சதவிகிதம் பேர் ஆதார் இணைப்பு!

80 சதவிகிதம் பேர் ஆதார் இணைப்பு!

80 சதவிகித வங்கி கணக்குகளும், 60 சதவிகித மொபைல் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வங்கி கணக்கு, வருமான வரி நிரந்தர கணக்கு மற்றும் மொபைல் எண்களை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீடித்திருந்தது. இதுகுறித்து யு.ஐ.டி.ஏ.ஐ. அலுவலர் ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “நாட்டில் மொத்தம் உள்ள 109.9 கோடி வங்கி கணக்குகளில், 87 கோடிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதோடு, 58 கோடி வங்கி கணக்குகள் சரி பார்க்கப்பட்டவையாகும். 142.9 கோடி மொபைல் இணைப்புகளில் 85.7 கோடி ஏற்கனவே ஆதாருடன் இனைக்கப்பட்டவையாகும்” எனத் தெரிவித்தார்.

வரும் மார்ச் மாத இறுதிக்குள் வருமான வரி நிரந்தர எண், வங்கி எண், கிரடிட் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, பரஸ்பர நிதி, ஓய்வூதியம் மற்றும் சமூக நல திட்டங்களுக்கும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். விர்ட்யூவல் ஐடி என்னும் புதிய திட்டத்தின் மூலம் 12 இலக்க எண்ணை பகிர்வதற்கு பதிலாக ஒரு இணையதளத்தை அரசு உருவாக்கித்தர திட்டமிட்டுள்ளது. அதோடு பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக முகம் மற்றும் விரல் அடையாளங்களும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon