மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

உருண்டோடிய அரசுப் பேருந்தின் சக்கரம்!

உருண்டோடிய அரசுப் பேருந்தின் சக்கரம்!வெற்றிநடை போடும் தமிழகம்

தருமபுரியிலிருந்து பந்தாரஹள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள் கழன்று சாலையில் ஓடின. எனினும், டிரைவரின் திறமையால் பெரிய விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

தருமபுரியிலிருந்து காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பந்தாரஹள்ளிக்கு, 6ஏ என்ற பேருந்து இயக்கப்பட்டுவருகிறது. நேற்று (மார்ச் 4) மாலை 4.30 மணிக்கு பந்தாரஹள்ளியிலிருந்து பாப்பாரப்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்தைப் பிரபாகரன் என்பவர் ஒட்டிவந்தார். பேருந்தில் ஐந்து பேர் மட்டுமே பயணித்தனர். பேருந்து, பாப்பாரப்பட்டி அருகே வந்தபோது திடீரென்று பேருந்தின் பின் சக்கரம் இரண்டும் கழன்று ஓடியதால் பேருந்து நிலைதடுமாறியது.

ஆனால் டிரைவர் சாமர்த்தியமாகப் பேருந்தை நிறுத்தியதால், பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.

இதுபோன்று விருதுநகரிலும் அரசுப் பேருந்தின் பின் சக்கரம் கழன்று ஓடியது குறிப்பிடத்தக்கது.

‘போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குகிறது; பேருந்துகளுக்குப் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும்; அதனால்தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது’ என தமிழக அரசு கூறியது. கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பராமரிப்புப் பணியில் உள்ள போதாமையையே குறிக்கிறது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon