மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

எம்.ஜி.ஆர் சிலை திறந்த சிவாஜியின் வாரிசே!: அப்டேட் குமாரு

எம்.ஜி.ஆர் சிலை திறந்த சிவாஜியின் வாரிசே!: அப்டேட் குமாரு

ரஜினியை ஸ்கிரீன்ல காண்பிச்ச உடனே விசில் அடிக்குறதுலாம் அவரோட ரசிகர்களுக்கு சரிங்க, விட்டா நியூஸ் வாசிக்குறவங்களும் லைவ்லயே விசில் அடிப்பாங்க போலயே. ஒரு நிகழ்ச்சியில கலந்துக்குறதுக்காக ரஜினி போறாரு. சரி போனார்ன்னா என்ன நிகழ்ச்சின்னு பார்த்து அதுல என்ன பேசுறாரோ அதை எடுத்து நியூஸ்ல போடுறது தானங்க உலக வழக்கம். இவர் வீட்டுல இருந்து கிளம்புறதுல இருந்தே லைவ் போட ஆரம்பிச்சுடுறாங்க. ரோட்டுல போற மக்களை கார்ல நின்னுகிட்டே அவர் கும்பிடுற காட்சியை பார்க்கும் போது நியூஸ் பார்க்கோமா இல்ல முத்து படம் பார்க்கோமான்னு டவுட் ஆயிடுச்சு. ‘அதான் எங்க தலைவரோட கரிஸ்மா’ன்னு யாரும் கிளம்பிறாதீங்க. எல்லாம் இந்த சேனல் காரங்க பண்ணுற வேலை. காட்சியை ஓட விட்டு நியூஸ் சொல்லுவாங்களா... கபாலி பாட்டை போட்டு உருகுறாங்கங்க. பிரஸ் மீட் நடத்துனா இனி கேள்வி கேட்காம செல்ஃபி எடுபாங்கன்னு நினைக்குறேன். இதே மாதிரி தான் சிவாஜி கட்சி ஆரம்பிச்சு திருவையாறு தொகுதியில போட்டியிட்ட போது சிம்மக்குரலோனின் கர்ஜனை கபிஸ்தலத்தை நடுங்கவைக்குதுன்னு மீடியாகாரங்க எழுதுனாங்க. எலெக்‌ஷன் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு இந்த குமார் சொல்லி தான் தெரியனுமா?

@subadhra23

ஆண்கள் உலகையே திருப்பி விடுவார்கள். பைக் கீ தேடி எடுத்துக் கொடுக்க மட்டும் ஆள் வேண்டும்

@HAJAMYDEENNKS

கல்யாண மண்டபங்கள் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் நண்பர்களுக்கு புத்துணர்வு முகாமாகவும் மாறிவிடுகிறது...!

@Aruns212

மாடர்ன் ஆர்ட் மட்டுமல்ல,மகனின் ஆர்ட்டும் பல சமயம் புரிவதில்லை.

@idumbaikarthi

தாமரையோடு தண்ணீர் ஒட்டாது என்கிறார்கள்.

தாமரையோடு தண்ணீர் மட்டுமா ஒட்டாது? தமிழகமும்தான் ஒட்டாது.

@HAJAMYDEENNKS

இப்பலாம் வாட்ஸ்அப்ல ஷேர் செய்யணும் என்பதற்காகவே வதந்திகள் உருவாக்கப்படுகிறது...!

@CreativeTwitz

வெற்றிக்குப் பிறகு சிறகுகள் முளைத்தால் பரவாயில்லை. கொம்புகள் முளைத்து விடுகின்றன. அதனாலே பல துன்பம்.

@HAJAMYDEENNKS

ஹாஸ்பிட்டல்களில் ஜாதி,மதம் பார்க்கப்படுவதில்லை..

எல்லாருக்கும் பேஷன்ட் என்கிற ஒரே பெயர்தான்...!

@Selvatwitz

இன்ஜினியரிங் படித்தவன் மாடு மேய்ப்பது ஆச்சரியம் எனில்,

படித்தவன் எல்லாருக்கும்

வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிசயமே

@mohanramko

நேரத்திற்கு ஏற்றார் போல் தங்களை மாற்றி கொள்கின்றன, கடிகார முட்கள்

@senthilcp

தலைவரே!கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லை அப்டினு அவங்க உங்களை நக்கல் அடிக்கறாங்க

ஓஹோ, தலைக்கு கொஞ்சம் ஐ டெக்ஸ் மை வெச்சுப்பார்ப்பமா? தலை மை பண்பு அப்டினு சொல்லிக்கலாம்

@ajmalnks

பேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு-செய்தி

போற போக்கைப் பார்த்தால் வலைத்தளத்தை கொலைத் தளமாக்கிடுவானுக போலயே...

@ajmalnks

அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்- கமல்ஹாசன்

ஸ்ருதிஹாசன் எந்தப் பள்ளியில படிச்சதுன்னு ஜெயக்குமார் கேட்டுடப் போறாரு?

@ArunkumarTNR

"கேரளாவை தவிர வேறு எங்கும் தங்களுக்கு கிளைகள் இல்லை என்று விளம்பரம் செய்துகொள்ளும் நிலையில் தான் சிபிஎம் உள்ளது"

- ஹெச். ராஜா

நாடு முழுவதும் பாஜக கிளைகள் திறக்கலாம், ஆனால் தமிழகத்தில் குண்டூசி இடம் கூட பிடிக்க முடியாது எச்ச.ராஜா.

@mohanramko

'திருப்பி அடிச்சா தான்' வேலை செய்யும் அக்காலத்து ரேடியோக்கள்.

@saravananucfc

உலகம் ஒரு உருண்டை அதனால் ரவுண்டு கட்டி அடித்து வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்லுகிறது.

@DAnandaRaj

ATM வாசல்ல நின்னவனை PAYTM வசம் நிக்க வெச்சதுதான் இந்த அரசோட சாதனை.

Digital india ஹே!

@skpkaruna

எம்ஜிஆர் சிலையைத் திறந்து வச்சுட்டு, நான் தான் புரட்சித்தலைவரோட வாரிசுன்னு சொல்லப் போறார்! எதிர் பார்ட்டி ஏற்கனவே தன்னை நடிகர் திலகத்தோட வாரிசுன்னு கமிட் ஆகிட்டதாலே மக்களும் நம்ப வாய்ப்பிருக்கு. இன்னைக்கு எண்டெர்யிண்ட்மெண்ட் இருக்கு.

@Bathran*

ஊசி போடுவதற்கு குழந்தைகளுக்கு இருக்கும் பயத்தைவிட குழந்தையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என நமக்கு இருக்கும் படபடப்பு அதிகம்

கருப்பு கருணா

தமிழகத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு பயந்து ரவுடிகள் தானாகவே சரணடைந்து வருகின்றனர் - அமைச்சர் உதயகுமார்

அந்த சோடா பாட்டில் ரவுடி சரண்டராயிட்டாரா சார்?

@Kozhiyaar

பக்கத்து டேபில்ல ஒருத்தர் ஆர்டர் பண்ணுகிற எல்லாத்துக்கும் எப்படி செய்வாங்கன்னு செய்முறை விளக்கம் கேட்டுட்டு இருக்கார்!!

பாவம் வீட்டில நம்மல விட ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல!!!

@CreativeTwitz

SBIல இருந்து மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் பண்ண சொல்லி மேசேஜ் அனுப்பிருக்கான் எவனோ பல்க்கா லோன் அப்ளை பண்ணிருக்கான் போல

@sultan_Twitz

இயற்கையாகவே நான் ஒரு கைபுள்ள - சீமான் #

அத நீங்க சொல்லிதான்

தெரியனுமா தல!?

@VKtwitz_Vicky

முயற்சி செய்பவர்கள் முடிவெடுத்தது கொள்கிறார்கள்

விடாமுயற்சி செய்பவர்கள் முடிசூட்டிகொள்கிறார்கள்...!!!!

@வாசுகி பாஸ்கர்

தமிழ் நடிகர்களுக்கு வருடத்திற்கு ஒரு ஆஸ்கர் விருது கிடைக்க சிறப்பு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அது கிடைக்காம தான் அடுத்தடுத்து அரசியலுக்கு வந்து நம்ம உசுரை வாங்கிட்டு இருக்காங்க.

-லாக் ஆஃப்

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon