மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

அரசு செவிலியர் மாணவிகள் போராட்டம்!

அரசு செவிலியர் மாணவிகள் போராட்டம்!

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை விடுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 350க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்துவருகிறார்கள்.

இம்மருத்துவமனை விடுதிக் கட்டிடம் பழுதடைந்துள்ளதால், உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாணவிகள் குற்றம்சாற்றியுள்ளனர். தங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், உணவு ஆகியவை தரமற்று இருப்பதாகவும், அடிப்படை வசதியான கழிப்பறையும் சுகாதாரமாக இல்லை என்றும் மாணவிகள் கூறுகின்றனர். மேலும் விடுதியை மேம்படுத்தக் கோரிப் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதைக் கண்டித்து, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர் மாணவிகளின் இந்தப் போராட்டத்தால் மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon