மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

காகித உற்பத்தித் துறை 10% வளர்ச்சி!

காகித உற்பத்தித் துறை 10% வளர்ச்சி!வெற்றிநடை போடும் தமிழகம்

இந்தியாவின் காகிதத் துறை வருகிற 2019-20ஆம் நிதியாண்டில் 10 சதவிகித வளர்ச்சியுடன் 25 மில்லியன் டன் உற்பத்தியைக் கொண்டிருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பான அசோசெம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’காகிதப் பயன்பாட்டில் நுகர்வு அடிப்படையில் இந்தியா மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் காகிதப் பயன்பாடு 10.6 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. பிரிண்டிங், பேக்கேஜிங், ரைட்டிங், கோட்டிங் உள்ளிட்ட பல்வேறு வகையான காகிதங்களை இந்தியா தற்போது உற்பத்தி செய்து வருகிறது. மேலும், இந்தியாவில், டிஸ்யூ பேப்பர், டீ பேக்ஸ், ஃபில்டர் பேப்பர், லைட் வெயிட் ஆன்லைன் கோட்டட் பேப்பர் உள்ளிட்ட காகிதங்களுக்கு அதிகத் தேவை இருப்பதால் காகிதத் துறை வளர்ச்சியடைந்து வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

காகித உற்பத்தித் துறை வளர்ச்சி கண்டு வரும் போதிலும், காகித உற்பத்தியில் காணப்படும் அதிக உற்பத்திச் செலவுகளால் இத்துறைக்கு அபாயம் உள்ளது. மின்சாரம், உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு, தரமற்ற காகித இழைகள், தொழில்நுட்பப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் சவால்கள் உள்ளிட்ட காரணிகளும் இத்துறைக்குப் பின்னடைவு ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. மேலும், காகித உற்பத்தி ஆலைகளில் மின் சக்திப் பயன்பாட்டில் போதிய கண்காணிப்பு இல்லாமல் அதிக செலவு ஏற்படுவதும் இத்துறையின் வளர்ச்சிக்குச் சவாலான ஒன்றாக இருக்கிறது. வரும் 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்தம் 25 மில்லியன் டன் அளவிலான காகிதம் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon