மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

நடிகை கஸ்தூரி மீது புகார்!

நடிகை கஸ்தூரி மீது புகார்!வெற்றிநடை போடும் தமிழகம்

சாதிக் கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அன்றாட அரசியலைத் தீவிரமாக விமர்சனம் செய்துவரும் நடிகை கஸ்தூரி ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திவருகிறார்.

கடந்த மாதம் 22ஆம் தேதி விழுப்புரம் வெள்ளம்புத்தூர் எனும் கிராமத்தில் சிலர், சிறுவனை அடித்துக் கொலை செய்ததோடு, தாயை அடித்துத் துன்புறுத்தி சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு தமிழ்நாட்டையே குலுக்கியது. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நேரடியாகக் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டினார். ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே எழுத்துப் பிழை ஏற்பட்டு விட்டது என்று கூறி அந்தப் பதிவை நீக்குவதாகப் பதிவிட்டார் கஸ்தூரி.

இது தொடர்பாக சமூக நீதி சத்திரியர் பேரவை என்ற அமைப்பு சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 5) புகார் அளித்தது. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக நடிகை கஸ்தூரி தொடர்ந்து கருத்து தெரிவித்துவருவதாகவும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி பொய்யான கருத்துக்களைத் தெரிவித்து இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டிவருவதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon