மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமாவெற்றிநடை போடும் தமிழகம்

மார்ச் – ஏப்ரல் என வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது.11மணியளவில் வெளியில் சென்றாலே சுட்டெரித்து உடம்பு அனலாய் தகிக்கும். போதிய அளவு தண்ணீரும் குடிக்க மறந்திடுவோம். தானாக உடற்சூடு ஆரம்பித்துவிடும். பிறகென்ன தொண்டை வலி, ஒற்றை தலைவலி, வயிற்று வலி என்று ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். அவற்றுக்கெல்லாம் இயற்கையான சில வைத்திய முறைகள் இதோ.

தொண்டை வலி மற்றும் தொண்டை கவ்வல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பது நாமக்கட்டி. இந்த நாமக்கட்டியை சூடான நீரில் குழைத்து தொண்டையில் மேல் இருந்து கீழாக பற்று போட்டால் தொண்டை வலி குணமாகும்.

தூதுவளை கீரை வீடுகளிலேயே எளிமையாக வளரக்கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதனை நன்றாக நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் தொண்டை வலி குணமாகும்.

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இதில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி விரைவில் குணமாகும்.

சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதில் சிறிதளவு பனங்கற்கண்டை போட்டு சாப்பிட்டாலும் தொண்டை வலி குணமாகும்.

தலைவலி நீங்க பூவரச மரத்தின் பழுத்த இலைகளின் காம்புகளை எடுத்து தலையின் இரு ஒரங்களிலும் வைத்துக் கொண்டால் ஒற்றை தலைவலி நீங்கும்.

தொண்டை வலி வந்தால் உடனே தலைவலியும் வந்துவிடும், இந்த தலைவலிக்கு சீமை ஓட்டினை வெந்நீரில் நன்றாக அரைத்து தலையில் பத்துப்போட்டால் தலைவலி காணாமல் போய்விடும்.

ஒற்றை தலைவலி வந்தால், சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள், மிளகு ஆகியவற்றை நன்றாக அரைத்து தலைக்கு பத்துப்போட்டால் ஒற்றை தலைவலி காணாமல் போய்விடும்.

நெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லிதழை – 10 இலைகள்

தேன் – சுவைக்கு

வெற்றிலை – 1

மிளகு – 5 முதல் 10 வரை

துளசி – 10 இலைகள்

நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடுநரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை வாணலியில் விட்டு துண்டுகளாக்கப்பட்ட மூன்று இலைகளையும், மிளகையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதங்கிய கலவையை தண்ணீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும்.

அதனுடன் தேவைப்படும் அளவு தேன் சேர்த்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு வழங்கினால், குழந்தையின் நெஞ்சில் கட்டிய சளியும், கோழையும் சுத்தமாக கரைந்து வெளியேறி விடும். மிக எளிதில் கிடைக்கும் மேற்கண்ட மூலிகைகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பக்க விளைவில்லா மருந்தை வழங்கி சளித் தொல்லையை போக்குவோம்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon