மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 நவ 2019

பழைய வாகனங்களுக்குத் தடை!

பழைய வாகனங்களுக்குத் தடை!

காற்றில் மாசு அளவைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட கனரக வாகனங்களைத் தடைசெய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, ”பழைய வானங்கள் சாலையில் இயக்கப்படுவதைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பழைய கனரக வாகனங்களைத் தடைசெய்வது குறித்த பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.விபத்துக்களைத் தவிர்க்கவும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நகரங்களில், வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதைக் குறைப்பதற்கான திட்டங்களை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

2016ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் டில்லியில் வாகன கண்காட்சியை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'பழைய வாகனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பான அறிக்கை தயாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹரியானா அரசு 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon