மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

விஐபிகளுக்காக போக்குவரத்து பாதிப்பா?

விஐபிகளுக்காக போக்குவரத்து பாதிப்பா?வெற்றிநடை போடும் தமிழகம்

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் வாகனங்கள் செல்லும்போது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தொடர்ந்திருந்த மனுவில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவமனைக்கு அவசரமாகச் செல்லும்போது ராயப்பேட்டை அருகே தனது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்வதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்தாகவும் கூறியிருந்தார். ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இன்று (மார்ச் 5) விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் செல்லும்போது ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மட்டுமே வாகனங்கள் நிறுத்தப்படவேண்டும் எனக் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேவேளையில் ஜனாதிபதி, பிரதமர் வருகையின்போது இந்த நடைமுறை பொருந்தாது எனவும் கூறியுள்ளனர்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon