மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

சரிவைக் கண்ட சேவைகள் துறை!

சரிவைக் கண்ட சேவைகள் துறை!

பிப்ரவரி மாதத்தில் சேவைத் துறைக்கான ஒப்பந்தங்கள் குறைந்து, சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து ஐ.ஹெச்.எஸ். மார்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’சேவைத் துறைகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் பிப்ரவரி மாதத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டன. கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு 47.8 சதவிகிதம் சேவைத் துறைப் பணிகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் குறைந்துள்ளன. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் இந்தியாவின் சேவைத் துறை ஒப்பந்தங்கள் பெரும் சரிவைக் கண்டிருந்தன. அதற்குப் பிறகு சில மாதங்களாகச் சேவைத் துறை ஒப்பந்தங்கள் அதிகரித்து வந்த சூழலில் மீண்டும் இத்துறை கிட்டத்தட்ட 50 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.

அடிப்படைத் தேவைகள் சரிவு, சந்தையில் நிலவும் கடுமையான போட்டி ஆகியவையே சேவைத் துறை தற்போது கண்டுள்ள கடும் சரிவிற்கு காரணமாகும். இந்தச் சரிவு மீண்டும் சீராகும். இயற்கையாகவே சேவைத் துறையில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதே சமயத்தில் உற்பத்தித் துறை கடந்த ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது’ என்று கூறியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளான பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களில் இருந்து இந்தியா முழுமையாக மீண்டுவர இன்னும் ஒரு வருட காலமாகும் என்று சந்தை ஆய்வு நிறுவனமான நோமுரா கடந்த வாரத்தில் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon