மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

க்ரீன் மேட் தொழில்நுட்பத்தை மிஞ்சிய யூ டியூப்!

க்ரீன் மேட் தொழில்நுட்பத்தை மிஞ்சிய யூ டியூப்!வெற்றிநடை போடும் தமிழகம்

உலகின் முன்னணி வீடியோ பதிவு நிறுவனமான யூ டியூப் பயனர்களின் வீடியோவில் நேரடியாகப் பின்னணி தோற்றத்தை மாற்றம் செய்துகொள்ளும் வசதியை சோதனை செய்து வருகிறது.

யூ டியூப் நிறுவனம் முன்னணி வீடியோ பதிவு மையமாக செயல்பட்டு வருகிறது. முதலில் வீடியோக்களை பதிவு செய்துகொள்ளும் வசதி மட்டும் இருந்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நேரடியாக பயனர்கள் வீடியோவை ஒளிபரப்பவும் இதில் வசதிகள் சேர்க்கபட்டது. எனவே முன்பிருந்த பயனர்களைக் காட்டிலும் தற்போது அதிகளவு பயனர்கள் இதனால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

அதிலும் இந்தியாவில் யூ டியூப் பயன்பாடு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயனர்களை மேலும் கவரும் விதமாக மற்றொரு புதிய வசதியை யூ டியூப் நிறுவனம் சோதனை மேற்கொண்டு வருகிறது. அதில் பயனர்கள் வீடியோ பதிவிடுவதற்கு முன்னர் அதன் பின்னணியை மாற்றம் செய்து கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு கொண்டு இந்த வசதியை அவர்கள் செயல்படுத்தி உள்ளனர். எனவே பயனர்கள் வீடியோவை பதிவிடும் பொழுதே அதன் பின்னணி நிறத்தை தேவையான வகையில் மாற்றம் செய்துகொள்ள முடியும்.

இதற்கு முன்னர் இதேபோல் ஒரு வசதியை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அதில் பின்னணியை மாற்றுவதற்கு பதிலாக பயனரின் முகத்தில் பல அனிமேஷன்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்க முடியும். ஆனால் அவை புகைப்படங்களுக்காக வழங்கப்பட்டவை, அதன் தொடர்ச்சியாக தற்போது யூ டியூப் அறிமுகம் செய்துள்ள வசதியானது புதுமையான ஒன்றாக உள்ளது. இதற்கு முன்னர் பின்னணியை மாற்ற வேண்டுமெனில் க்ரீன் மேட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர். ஆனால் இந்த வசதியானது பயனர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon