யூ ட்யூப் பயன்படுத்துவதில் தமிழகம் உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் யூ ட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அரசியல், நகைச்சுவை, படங்கள் போன்றவை இளைஞர்களால் அதிகளவில் பகிரப்படுகின்றன. புதிய வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், சமையல் வீடியோக்கள், அழகுக் குறிப்புகள், அரசியல் வீடியோக்கள், நடன வீடியோக்கள் போன்றவை யூ ட்யூபில் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், யூ ட்யூப் இணையதளத்தை அதிகம் பார்க்கும் மக்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் உலகிலேயே யூ ட்யூப் பயன்பாட்டில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 22 கோடி மக்கள் யூ ட்யூபைப் பயன்படுத்திவருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமையல் குறிப்புகள், கல்வி, அரசியல், சினிமா ஆகியவை ட்ரெண்டிங்கில் உள்ளன.
முன்பெல்லாம் 28 நாட்களுக்கு ஒரு ஜிபி டேட்டாவுக்கு 200 ரூபாய் வசூலிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது தினசரி ஒரு ஜிபி டேட்டாவை செல்பேசி நிறுவனங்கள் அதே விலையில் அளித்துவருகின்றன. குறிப்பாக ஜியோ வந்ததற்குப் பிறகு இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. மக்கள் யூ ட்யூபில் படங்கள், பாடல்கள் போன்றவற்றைப் பார்ப்பது அதிகரித்துள்ளது.