மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

அரையிறுதிக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

அரையிறுதிக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!வெற்றிநடை போடும் தமிழகம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து வருகிற புதன்கிழமை (மார்ச் 7) முதல் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நான்காவது சீசன் போட்டிகள் கடந்த (2017) நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் நடைபெற்றுவருகின்றன. அதில் லீக் போட்டிகள் நேற்றுடன் (மார்ச் 4) முடிவடைந்த நிலையில் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்க உள்ளன. அரையிறுதிப் போட்டிகள் மொத்தம் இரண்டு விதமாக நடத்தப்படும். அதாவது ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் இரண்டு முறை மோத வேண்டும். ஒரு போட்டி உள்ளூர் மைதானத்திலும் மற்றொன்று எதிரணியின் உள்ளூர் மைதானத்திலும் நடத்தப்படும். இரண்டு போட்டிகளிலும் அடிக்கப்படும் கோல்களின் மொத்த எண்ணிக்கையை வைத்து வெற்றி அறிவிக்கப்படும்.

அதன்படி முதல் அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணியும் நான்காவது இடத்தில் உள்ள புனே சிட்டி அணியும் மோத உள்ளன. சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணியும், மூன்றாவது இடத்தில் உள்ள புனே அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி இந்த முறை மோசமான தொடர் தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்து வெளியேறியுள்ளது. ஆனால் புதுமுக அணியாகக் களமிறங்கி உள்ள பெங்களூரு அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon