மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 5) தொடங்கின.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கின. மொத்தம் 17,574 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக 4453 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 78 தேர்வு மையங்கள் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும். ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறும்.

பத்தாம் வகுப்புத் தேர்வெழுத 4510, ப்ளஸ் 2 வகுப்புத் தேர்வெழுத 2846 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு மாணவர்கள் இந்தத் தேர்வில் கணினியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு தேர்வு கண்காணிப்பாளரின் அனுமதி அவசியம். அதேபோல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தேர்வறைக்குள் அவர்களுக்கான உணவுகளைக் கொண்டுசெல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon