மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

நிலக்கடலை கொள்முதல் பணி!

நிலக்கடலை கொள்முதல் பணி!

குஜராத் மாநில விவசாயிகளிடமிருந்து கூடுதலாக 1 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையைக் கொள்முதல் செய்வதற்கான பணி மார்ச் 5 (இன்று) முதல் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “நிலக்கடலையைக் கொள்முதல் செய்வதற்காக சுமார் 36,480 விவசாயிகள் இதுவரையில் ஆன்லைன் போர்டலில் பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மாநிலத்தின் 22 மாவட்டங்களில் மொத்தம் 110 கொள்முதல் மையங்கள் வாயிலாக 1 லட்சம் டன் அளவிலான நிலக்கடலை கொள்முதல் செய்யப்படும். இதற்கான பணி மார்ச் 5ஆம் தேதி (இன்று) தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரையில் நடைபெறும். இக்கொள்முதல் பணிகள் யாவும் சிசிடிவி கேமிரா கண்காணிப்பில் மிகச் சிறப்பான முறையில் நடைபெறும்” என்றார்.

2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் கொள்முதல் பணி தொடங்கியதிலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500 கொடுத்து மொத்தம் 9 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதில் மாநில அரசு சார்பாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 போனஸ் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் நிலக்கடலை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள குஜராத் மாநிலத்தில் 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 32 லட்சம் டன் அளவிலான நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது 2016-17ஆம் ஆண்டில் உற்பத்தியான 29 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையை விட 10.5 சதவிகிதம் கூடுதலாகும்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon