மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

ஸ்கில் இந்தியா: வெளிநாடுகளில் வேலை!

ஸ்கில் இந்தியா: வெளிநாடுகளில் வேலை!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற 'ஸ்கில் இந்தியா' திட்டம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று ஜெயந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜெயந்த் கிருஷ்ணா இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஸ்கில் இந்தியா திட்டத்தால் மேற்கு ஆசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். தேசியத் திறன் மேம்பாட்டு நிறுவனம், இந்திய சர்வதேச திறன் மையங்களை (ஐ.ஐ.எஸ்.சி.) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் முதல் படியில்தான் இப்போது இருக்கிறோம்.

ஐ.ஐ.எஸ்.சி. மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிப்பதுதான் நமது நோக்கமாகும். தற்போது வெளிநாடுகளுக்குக் குடிபெயர்பவர்களில் பலர் கடினமான வாழ்க்கையை எதிர்கொண்டுள்ளனர். போதிய திறன் பயிற்சிகள் இல்லாததால் இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஓட்டுநர்களாகச் செல்கின்றனர். ஆனால் முதல் சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு உதவியாளர்களாகத்தான் அவர்கள் செயல்படுகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மட்டுமின்றி மொழிப் பயிற்சி, கலாச்சாரம் மற்றும் நடைமுறைகள் குறித்த பயிற்சியும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon