மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

மானிய ஸ்கூட்டர் விற்கத் தடை!

மானிய ஸ்கூட்டர் விற்கத் தடை!

தமிழக அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் ஸ்கூட்டரை விற்க மூன்றாண்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில் ஆர்சி புத்தகத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மானிய ஸ்கூட்டர் வழங்க ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சென்னையில் மட்டும் 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதிலிருந்து முதல் கட்டமாக தற்போது 1000 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் 3,922 இருசக்கர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று முதல் கட்டமாக 149 பேருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில் 134 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வீதம் மொத்தம் ரூ.33 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் மானிய ஸ்கூட்டர் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் இந்த ஸ்கூட்டர்களை மூன்று ஆண்டுகளுக்கு விற்கத் தடை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் மற்றும் மானிய விலை ஸ்கூட்டர் திட்ட இயக்குநர் அனுமதி இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு வாகன உரிமையையும் மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாகனத்தை மூன்றாண்டுகளுக்கு விற்கவோ, உரிமத்தை மாற்றமோ செய்யக் கூடாது என்று ஆர்சி புத்தகத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon