மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

தகுதிச் சுற்றில் முதல் நாள் வெற்றிகள்!

தகுதிச் சுற்றில் முதல் நாள் வெற்றிகள்!

2019ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று (மார்ச் 4) ஜிம்பாப்வேயில் தொடங்கின.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவிருக்கும் 10 அணிகளில் 8 அணிகள் ஐசிசி தரவரிசையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு மீதமுள்ள இரண்டு இடங்களுக்காகப் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. ஆனால் தேர்ச்சி பெறாத அணிகளுக்கு இடையே தற்போது தகுதி சுற்றுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தகுதிச் சுற்றுத் தொடரில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழையும். சூப்பர் சிக்ஸ் முடிவில் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், உலகக் கோப்பைப் போட்டிக்கும் தகுதி பெறும்.

நேற்று முதல் நாள் நடைபெற்ற நான்கு போட்டிகளில் ஐக்கிய அரபு, அயர்லாந்து, ஜிம்பாவே, மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. வருகிற 12ஆம் தேதி வரை இந்த லீக் போட்டிகள் நடைபெறும். இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்த மாதம் 25 வரை நடைபெறும்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon