மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு : சிபிஐக்கு பரிந்துரை!

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு : சிபிஐக்கு பரிந்துரை!

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த எஸ்எஸ்சி தேர்வாணையத் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.

அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 12,000 முதல் 40,000 காலியிடங்களை நிரப்பக் எஸ்எஸ்சி (மத்திய பணியாளர் தேர்வாணையம்) சார்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ‘ஜிஜிஎல் டயர் 2’ தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 1,89,843 பேர் எழுதினர்.

இந்நிலையில், 21 ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகப் புகார்கள் எழுந்தது. அதைத் தொடர்ந்து, தேர்வெழுதிய மாணவர்கள் டெல்லி எஸ்எஸ்சி அலுவலகம் முன்பு பிப்ரவரி 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் பணிக்கு ரூ.40 லட்சம் முதல் 50 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வினாத் தாள் வெளியானது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து, வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய எஸ்எஸ்சி தலைவர் அசிம் குரானா நேற்று (மார்ச் 4) பரிந்துரை செய்துள்ளார்.

அசிம் குரானா ,“தேர்வெழுதிய மாணவர்கள் வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி பரிந்துரை செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon