மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

2018 ஆஸ்கர்: வாகை சூடிய படங்கள்!

2018 ஆஸ்கர்: வாகை சூடிய படங்கள்!

90 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் நடைபெற்றது. திரைத்துறையினரால் மிக உயரிய விருதாகப் பார்க்கப்படும் இவ்விழாவில் பல்வேறு பிரிவுகளில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியல் ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி திரையரங்கில் விருது நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலிக்கலவை விருதை டன்க்ரிக் படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, தி ஷேப் ஆப் வாட்டர் என்ற திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக டன்கிர்க் திரைப்படம் 8 பிரிவுகளுக்கும், த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசொளரி" என்கிற படம் 7 பிரிவுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதில், தி ஷேப் ஆப் வாட்டர் படம் அதிகபட்சமாக 4 விருதுகளைக் கைப்பற்றியது. டன் கிரிக் படம் 3 விருதுகளை வென்றது.

ஆஸ்கர் விருது 2018 பட்டியல்

சிறந்த படம் : தி ஷேப் ஆப் வாட்டர்(The Shape of Water)

சிறந்த இயக்குநர்: கில்லர்மோ டெல் டோரோ (The Shape of Water)

சிறந்த நடிகர் :கேரி ஓல்ட்மன், (Darkest Hour)

சிறந்த நடிகை :பிரான்செஸ் மெக்டோர்மாண்ட்Three Billboards Outside Ebbing, Missouri

சிறந்த துணை நடிகர்:சாம் ராக்வெல், (Three Billboards Outside Ebbing, Missouri)

சிறந்த துணை நடிகை : ஆலிசன் ஜேனி, ( I, Tonya)

சிறந்த திரைக்கதை: ஜோர்டான் பீல் (Get Out)

சிறந்த தழுவிய திரைக்கதை: ஜேம்ஸ் ஐவரி (Call Me by Your Name)

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்: செபாஸ்டியன் லியோலியோ (A Fantastic Woman)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: லீ அன்க்ரிச் மற்றும் டார்லா கே ஆண்டர்சன் (Coco)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஜான் நெல்சன், கெர்ட் நெஃபர், பால் லம்பேர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர். ஹூவர் (Blade Runner 2049)

சிறந்த படத்தொகுப்பு: லீ ஸ்மித் (Dunkirk)

சிறந்த அனிமேஷன் குறும்படம்: க்ளென் கீன் மற்றும் கோபி பிரையன்ட் (Dear Basketball)

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் : கிறிஸ் ஓர்ட்டன் மற்றும் ரேச்சல் ஷெண்டன் (The Silent Child)

சிறந்த குறு ஆவணப்படம் :ஃபிராங்க் ஸ்டீபெல் (Heaven Is a Traffic Jam on the 405)

சிறந்த மியூசிக் ஸ்கோர்: அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்லாட்(The Shape of Water)

சிறந்த பாடல் : கிறிஸ்டன் ஆண்டர்சன்-லோபஸ் மற்றும் ராபர்ட் லோப்சின் (coco)

சிறந்த புரொடக்ஷன் டிசைன்: பால் டென்ஹம் ஆஸ்டர்பெர்ரி (தயாரிப்பு வடிவமைப்பு) ஷேன் வையு மற்றும் ஜெஃப்ரி ஏ மெல்வின் (செட் அலங்காரம்) (The Shape of Water)

சிறந்த ஒளிப்பதிவு : ரோஜர் ஏ. டீக்கின்ஸ் (Blade Runner 2049)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் : மார்க் பிரிட்ஜசு (Phantom Thread)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் : கஜுஹிரோ சுஜி, டேவிட் மல்லோவ்ஸ்கி (Darkest Hour)

சிறந்த முழுநீள ஆவணப்படம் : பிரையன் ஃபோகல் மற்றும் டான் கோகன் (Icarus)

சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ரிச்சர்ட் கிங்,அலெக்ஸ் கிப்சன் (Dunkirk)

சிறந்த சவுண்ட் மிக்சிங் : கிரெக் லண்டகர், கேரி ஏ. ரிஸா மற்றும் மார்க் வேங்கர்டன் (Dunkirk)

(ஆஸ்கர் விழாவில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் நாளை காலை 7 மணி பதிப்பில்)

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon