மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

தினம் ஒரு சிந்தனை : செயல்!

தினம் ஒரு சிந்தனை : செயல்!

ஒரு மனிதனின் தீய செயல்களை வெறுத்து ஒதுக்கு. அதனால் மனிதனை ஒதுக்காதே.

- ஜார்ஜ் பெர்னாட்ஷா (ஜூலை 26 1856 - நவம்பர் 2 1950 ). அயர்லாந்து நாடக ஆசிரியர், விமர்சகர். தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதியவர். அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும்.ஆணுக்குச் சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர்.இலக்கியத்திற்கான நோபல் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே. மேன் மற்றும் சூப்பர்மேன் (1902), பிக்மேலியன் (1912) மற்றும் செயின்ட் ஜோன் (1923) போன்ற பெரிய படைப்புகள் உட்பட அறுபது நாடகங்களை எழுதியவர்.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon