மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

துவரை அறுவடையில் விவசாயிகள்!

துவரை அறுவடையில் விவசாயிகள்!வெற்றிநடை போடும் தமிழகம்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கெங்கவல்லி, வீரகரூர், தலைவாசல், தம்மம்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த துவரை பயிரை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். துவரம் பருப்புக்கு எப்போதும் கணிசமான விலை கிடைக்கிறது. இதனால் பருவ மழையின் போது மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து கெங்கவல்லி விவசாயி தினமலர் ஊடகத்திடம் பேசுகையில், “துவரைச் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5000 வரை செலவாகின்றது. கோ(ஆர்.ஜி)7,எலார்ஜி41,வம்பன்2,3, பிஎஸார்1 போன்ற வகைகள் சாகுபடிக்கு ஏற்றதாகும். ஆரம்பத்தில் ஒரு முறை களை எடுத்தால் போதும். வைகாசியில் விதை விதைத்து, தை அல்லது மாசியில் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்தபின் தொடர்ந்து 10 நாட்களுக்குக் காய வைக்க வேண்டும். பின், செடியிலிருக்கும் காய்களை தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். தற்போது, ஒரு கிலோ துவரை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon