மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 நவ 2019

வாட்சப் வடிவேலு

வாட்சப் வடிவேலு

காலா பட டீசர் குறியீடுகளையோ, ரோபோ 2.0 டீசர் லீக் ஆனதை பற்றியோ, கனடா பிரதமர் "எங்க ஆளு தெரியுமா? " என்பதை பற்றியோ

கண்டுபுடிச்சு கட்டுரை எழுதி அனுப்பிருப்பாங்கன்னு பார்த்தா, இதான் வந்ததுச்சு வாட்சப் ல. படிப்போம் வாங்க.

மன்னிக்கவும்

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே

இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.

அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:

"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.

அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!

"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"

இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்

போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.

ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? அமைதியாக இருங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.

✍நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன்.

ஏனெனில்,

நாம் பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

ஆமாம்ய்யா.. குறுகிய காலம்தான். இத மொபைல் படிச்சி பார்த்துக்கிட்டே வந்ததுல இறங்க வேண்டிய ஸ்டாப் போயிருச்சு.

ப்ச்ச்ச்ச்.. ஆரம்பத்துல மன்னிக்கவும்ன்னு ஏன் அனுப்பிருக்காரு இப்பதான் புரிஞ்சது.

நடத்துங்கய்யா நடத்துங்க.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon